Unakkethiraana Aayuthanggal - உனக்கெதிரான ஆயுதங்கள்

Unakkethiraana Aayuthanggal - உனக்கெதிரான ஆயுதங்கள்


 


உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே மகனே
நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை

உன்னை நான் காப்பாற்றி
அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன்
இரவினிலும் பகலினிலும்
சேதமில்லாமல் காத்திடுவேன்
உன்னை கொண்டு மலைகளையும்
குன்றுகளையும் நான் தகர்த்திடுவேன்

ஏழு மடங்கு அக்கினியில்
சேதமில்லாமல் காத்திடுவேன்
ஒரு வழியாய் வந்தவர்கள்
ஏழு வழியாய் ஓடச்செய்வேன்
உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது
தடை செய்ய யாருமில்லை

சிங்கத்தின்மேல் நீ நடந்திடுவாய்
சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய்
உனக்கெதிராய் எழுதப்படும்
சட்டங்களை நான் மாற்றிடுவேன்
உன்னைக் கொண்டு தேசத்திலே
என் நாமம் முழங்கச் செய்வேன்


Song Description: Tamil Christian Song Lyrics, Unakkethiraana Aayuthanggal, உனக்கெதிரான ஆயுதங்கள்.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Ella Ganathirkum Paathirar, Christian Song Lyrics.


Please Pray For Our Nation For More.
I Will Pray