Inside White - வெள்ளை உள்ளம்.
அமெரிக்க தேசத்தில் ஒரு சபை உண்டு. அந்த சபையில் வெள்ளை நிற மனிதர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள். அது ஒரு பெரிய சபை. ஒரு முறை ஒரு கருப்பின
போதகரை அந்த சபை போதகர் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த கருப்பினத்தவரின் ஆவிக்குரிய காரியங்களால் ஈர்க்கப்பட்ட அந்த போதகர் ஒரு நாள் தன்னுடைய சபைக்கு வந்து கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ள அழைத்தார். குறிப்பிட்ட நாளும் வந்தது. சபையில் பாடல், ஆராதனை எல்லாம் முடிந்தது. அடுத்து அந்த போதகர், "நம்மிடையே இங்கு சோ அன் சோ உள்ளார். தற்பொழுது கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ளுவர் என்று கூறிவிட்டு போய் அமர்ந்து கொண்டார்.அடுத்து அந்த போதகர் கையில் வேதத்துடன் வந்து பலிபீடத்தின் முன் நின்றார். அந்த சபையில் அவர் மட்டும்தான் கருப்பு. அவர் வந்து நின்றதுதான் தாமதம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. ஒட்டு மொத்த சபையும் அவரை பார்த்து ஒரே சிரிப்பு சிறியோர் முதல் பெரியவர் வரை. 5 நிமிடமாக கூச்சல், பயங்கர சத்தமாக சிரித்து கொண்டே இருந்தனர்.அந்த சபை போதகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இப்படி அவமான படுத்தி விட்டார்களே என்று அமர்ந்து இருந்தார். அந்த போதகர் அங்கு இருந்த சபை மக்களை பார்த்து
"நான் வெளியில் கருப்புஎன் உள்ளமோஉள்ளே வெள்ளை,
நீங்கள் வெளியில் வெள்ளை, உங்கள்
உள்ளே உள்ளம் கருப்பு "
"நான் வெளியில் கருப்பு
என் உள்ளமோஉள்ளே வெள்ளை,
நீங்கள் வெளியில் வெள்ளை, உங்கள்
உள்ளே உள்ளம் கருப்பு "
இதையே ஒரு 5 நிமிடம் கூறி கொண்டே இருந்தார். கண்களை மூடி.
அடுத்த 6 ஆவது நிமிடம் சபையில் உள்ள மக்கள் கீழே விழ ஆரமித்தனர். அழுது ஒப்பு கொடுக்க ஆரம்பித்தனர். தங்களின் தவறை உணர்ந்து கர்த்தரிடத்திலும், அந்த போதகரிடத்திலும் ஒட்டு மொத்த சபையும் மன்னிப்பு கேட்டது.
அதன் பின் செய்தியை கொடுக்க ஆரம்பித்தார்.
நிறங்களின் அடிப்படையில் கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறாரா?
அன்பு காண்பிக்கிறாரா?
இல்லவே இல்லை.
நம்முடைய கண் நிறத்தை தேர்வு செய்ய கடவுள் நம்மை அனுமதித்தாரா? நம் சருமத்தின் நிறம் எப்படி? உங்கள் முக எலும்பு அமைப்பு? எல்லாவற்றையும் கடவுளே தேர்ந்தெடுத்து படைத்து உள்ளாரே ! கடவுள் நம முகம் பார்க்கும் முன்னே தாயின் வயிற்றிலேயே நம்மை நேசிக்க ஆரம்பித்து விட்டார்.
நிறங்களையும், அழகையும் சில நேரங்களில் பெற்றோரே சொல்லி காண்பிப்பது உண்டு. நம்முடைய வாழ்வின் போராட்டங்கள் தோளின் நிறங்களோடு அல்ல.
கடவுள் நம் சருமத்தின் நிறத்தை தேர்வு செய்திருகிறார். நாம் கதாபாத்திரத்தையும், குணங்களையும் நாம் தேர்வு செய்வோம்.
சருமத்தின் நிறத்தை கர்த்தர் தேர்வு செய்திருகிறார் நாம் நம் குணங்களை தேர்வு செய்வோம்.
Sis. Meena Juliet
Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet, Inside White - வெள்ளை உள்ளம்.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.