Rettippana Nanmaigal Thanthida - இரட்டிப்பான நன்மைகள் தந்திட



இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே - 2
முன் மாரி மேல் பின் மாரி மழையே
உன்னதத்தினின்று வந்திறங்குதே - 2
                           - இரட்டிப்பான

பெலத்தின் மேலே மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட - 2
சால்வை தனை எலிசா அடைந்தாற்போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் - 2
                           - இரட்டிப்பான

ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய்ப் பெற்றிட - 2
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெயிப்போம் - 2
                           - இரட்டிப்பான

நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல்விசுவாசம் பெற்றிட - 2
ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
அற்புதம் நாம் என்றும் காணுவோம் - 2
                           - இரட்டிப்பான

பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட - 2
நீதியின் சூரியன் ஏசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம் - 2
                           - இரட்டிப்பான

கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட - 2
ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம் - 2
                           - இரட்டிப்பான


Song Description: Tamil Christian Song Lyrics, Rettippana Nanmaigal Thanthida, இரட்டிப்பான நன்மைகள் தந்திட.
KeyWords: Deva Saayal Aaga Maari,  Saral navaroji lyrics, sarah navaroji songs lyrics, Rattippana Nanmaihal Thanthida, Retippana Nanmaihal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.