Enakkaa Ithana Kiruba - எனக்கா இத்தன கிருபை



எனக்கா இத்தன கிருபை
என் மேல் அளவற்ற கிருபை

என்ன விட எத்தனை பேர்
தகுதியாக இருந்தும்
என்ன மட்டும் கிருபையின்று
தேடிவந்ததே

உங்க கிருப என்னை வாழ வைத்ததே
உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே

பயனற்ற நிலத்தை போல
மறக்கப்பட்டவன் நான்
அறுவடை காணாமல்
தணிந்து போனவன் நான்
தரிசான என் மேல் தரிசனத்தை வைத்து
அறுவடையை துவக்கி வைத்தவரே

உங்க கிருப என்னை வாழ வைத்ததே
உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே

தோல்வியின் ஆழங்களில்
மூழ்கி போனவன் நான்
வாழ்த்திடும் நோக்கங்களை
இழந்து போனவன் நான்
அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
அற்புதங்கள் செய்ய வைத்தவரே

எனக்கா இத்தன கிருபை
என் மேல் அளவற்ற கிருபை

என்ன விட எத்தன பேர்
தகுதியாக இருந்தும்
என்ன மட்டும் கிருபை
வந்து உயர்த்தி வைத்ததே
என்ன விட எத்தனை பேர்
நல்லவனாக இருந்தும்
என்ன மட்டும் தேடி வந்து
சுமந்து கொண்டதே

உங்க கிருபை என்னை வாழ வைக்குதே
உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
ஹல்லேலூயா உங்க கிருபை போதுமே


Songs Description: Tamil Christian Song Lyrics, Enakkaa Ithana Kiruba, எனக்கா இத்தன கிருபை.
KeyWords: John Jebaraj, Levi, Enakka Ithana Kirubai, Enakkaa Ithana Kiruba.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.