Love Others - பிறரை நேசியுங்கள்



நன்மையை பெற வேண்டுமா?
பிறருக்கு நன்மை செய்யுங்கள்

நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ?
நீ நன்மைசெய்யாதிருந்தால்
பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்...
                                           ஆதியாகமம் 4:7

நன்மை செய்ய என்ன செய்ய வேண்டும்?
பிறருக்கு தீமை நினையாமல் இருப்பதே
நாம் செய்யும் சிறந்த நன்மை.

எப்படி தீங்கு நினையாமல்
இருக்க முடியும்?
பிறரை நேசிக்கும் பொழுது.
ஆம், பிறர் மேல் அன்பு செலுத்தும்பொழுது
நம்மால் அவர்களுக்கு தீங்கானதொன்றும்
நினைக்க இயலாது அல்லவா.
வேதமும் அதைத்தான் நமக்கு கற்றுத்தருகிறது.

4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது.
அன்புக்கு பொறாமையில்லை.
அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
5 அயோக்கியமானதைச் செய்யாது,
தற்பொழிவை நாடாது, சினமடையாது,
தீங்கு நினையாது.
6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல்,
சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7 சகலத்தையும் தாங்கும்,
சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும்,
சகலத்தையும் சகிக்கும்.
8 அன்பு ஒருக்காலும் ஒழியாது...
1 கொரிந்தியர் 13:4 - 8

பிறர் என்றால் நம் உறவினர்கள்,
நமக்கு வேண்டியவர்கள்மேல்
செலுத்தும் அன்பு மாத்திரம் அல்ல.
நம்மை வெறுக்கிறவர்கள்,
நமது பகைவர்களும் மேல்
நாம் செலுத்தும் அன்பு.

உங்களைச் சிநேகிக்கிறவர்களையே
நீங்கள் சிநேகித்தால்,
உங்களுக்குப் பலன் என்ன?
பாவிகளும் தங்களைச்
சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.
                                      லூக்கா 6:32

இது நம்மால்
முடியாத காரியம் தான் ஆனால்,

தேவனால் கூடாத காரியம்
ஒன்றுமே இல்லை, ஜெபியுங்கள்
கர்த்தர் நமக்கு மன்னிக்கும்
மனப்பான்மையைத் தருவார்

உங்கள் வாழ்வில் நன்மையை
பெற்றுக்கொள்ள வேண்டுமா?
நன்மையானதை விதையுங்கள்,
நன்மையையே பலனாய் பெற்றுக்கொள்வீர்கள்.

...மனுஷன் எதை விதைக்கிறானோ
அதையே அறுப்பான்.
                               கலாத்தியர் 6:7

..உங்கள் எதிராளியாகிய பிசாசானவன்
கெர்ச்சிக்கிற சிங்கம்போல்
எவனை விழுங்கலாமோ என்று
வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
                            1 பேதுரு 5:8

ஆனால் நம் தேவனோ

..அவர் நன்மைசெய்கிறவராயும்
பிசாசின் வல்லமையில்
அகப்பட்ட யாவரையும்
குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
அப்போஸ்தலர் 10:38

நாம் தேவனை பின்பற்றுகிறவர்களை
பின்பற்றுகிறவர்கள் அல்ல மாறாக
நாம் தேவனையே பின்பற்றுகிறவர்கள் ஆமேன்.





Bro. Allwin Benat

Description: Devotional Tamil Message By Bro. Allwin Benat, Love Others, பிறரை நேசியுங்கள்.
Keywords: Bro. Allwin Benat, Devotional, Tamil Devotional Message, Do Something.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.