Like Noah - நோவாவைப் போல
கீழ்ப்படிதலின் பலனாக
கர்த்தரிடத்தில் கிருபையை
பெற்றுக்கொண்ட நோவா
நோவாவுக்கோ, கர்த்தருடைய
கண்களில் கிருபை கிடைத்தது.
ஆதியாகமம் 6:8
முழு உலகமும் பாவத்தால்
நிறைந்திருக்கிறதை ஆண்டவர் கண்டு
முழு உலகத்தையும் அழிக்க நினைத்த
போதிலும் கர்த்தர் கண்களில்
நீதிமானாகிய நோவாவிற்க்கு
தயை கிடைத்தது நோவாவின்
குடும்பத்தை மாத்திரம்
ஆண்டவர் பாதுகாத்தார்.
மழை என்ற ஒன்றை அவர் காணாத,
கேட்டிராத போதும் ஆண்டவர்
வார்த்தையை விசுவாசித்து
ஆண்டவர் சொன்ன படியே எல்லாம்
அவர் பேழையை செய்து முடித்தார்.
..தனக்குக் கட்டளையிட்டபடியே எல்லாம்
அவன் செய்து முடித்தான்.
ஆதியாகமம் 6:22
மழை என்ற ஒன்று வருமோ,
அது சாத்தியமோ என்ற சந்தேகத்துடன்
ஆண்டவர் வார்த்தைக்கு
அவர் கீழ்ப்படியாமல் இருக்கவில்லை
ஆண்டவர் மேல் முழு நம்பிக்கை வைத்து
ஆண்டவர் வார்த்தைக்கு செவி சாய்த்தார்
ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார்.
நாமும் சில நேரங்களில் ஆண்டவர்
சொல்லியும் கீழ்ப்படியாமல்
அது எப்படி முடியும்? இது எப்படி சாத்தியம்
என்று ஆண்டவரிடமே கேள்வி
கேட்டுக்கொண்டிருக்கிறோம்
அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
செய்கிற கர்த்தரின் வார்த்தைக்கு செவி
சாய்ப்போமானால் அவர் நமது
வேண்டுதல்களை நிறைவேற்றுவார்.
எனவே நாமும் கீழ்ப்படிவோம்
கிருபையை பெற்றுக்கொள்வோம், ஆமென்.
Bro. Allwin Benat
Description: Devotional Tamil Message By Bro. Allwin Benat, Like Noah, நோவாவைப் போல.
Keywords: Bro. Allwin Benat, Devotional, Tamil Devotional Message.
Keywords: Bro. Allwin Benat, Devotional, Tamil Devotional Message.