Thaayin Karuvil - தாயின் கருவில்
தாயின் கருவில்
உருவான நாள்முதல்
பெயர் சொல்லி அழைத்தவரே
தாயின் கருவில் உருவான நாள்முதல்
தெரிந்து கொண்டவரே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே
தெரிந்துகொண்டவரே
என் அவையங்கள் உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி அழைத்தவரே - 2
நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா - 2
நன்றி நன்றி நன்றி நன்றி - 2
பிரம்மிக்கதக்கதாய் உண்டாக்கினீர்
உம் சாயலின் அழகை எனக்குத் தந்தீர் - 2
நாசியில் சுவாசத்தை எனக்குத்தந்து
என்னை சுகத்தோடு வாழ செய்தீர் - என் -2
- நன்றி தகப்பனே
தாய் என்னை மறந்தாலும்
தந்தை என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை - 2
என்னை உள்ளங்கையில் நீர் வரைந்துள்ளீர்
என்னை ஒருபோதும் மறக்க மாட்டீர் - 2
- நன்றி தகப்பனே
நீர் என்னை ஆராய்ந்து அறிகின்றவர்
நான் நடந்தாலும் படுத்தாலும் அறிகின்றவர் - 2
உம் ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்
உம் சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன் - 2
- நன்றி தகப்பனே
Song Description: Tamil Christian Song Lyrics, Thaayin Karuvil, தாயின் கருவில்.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol - 2, Thayin Karuvil, Thaiyin Karuvil.