Karthane Em Thunaiyaneer - கர்த்தனே எம் துணையானீர்



கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்
                    - கர்த்தனே

2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை
                   - கர்த்தனே

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை
                    - கர்த்தனே

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
ஜீவனே உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை
                    - கர்த்தனே

Song Description: Tamil Christian Song Lyrics, Karthane Em Thunaiyaneer, கர்த்தனே எம் துணையானீர்.
KeyWords: Christian Song Lyrics, Cathrine Ebenesar, Tamil Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.