Ethenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம்
ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே
இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்-மூவர்
பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம்
ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே-இம்மாப்பிள்ளைக்கு
பெண்ணை கொடுக்க வாருமே
இரு தன்மையும் சேர்ந்தே
கன்னியின் மைந்தனே-இவர்கள்
இரு கையும் இணைக்க வாருமே
மெய் மணவாளனான
தேவ குமாரர்க்கே-சபையாம்
மனையாளை ஜோடிக்கும் ஆவியே
நீரும் இந்நாளில் வந்து
இவ்விரு பேரையும்-இணைத்து
அன்பாய் வாழ்த்தி மெய் பாக்யம் ஈந்திடும்
கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்-எத்தீங்கில்
நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும்
Song Description: Tamil Christian Song Lyrics, Ethenil Aathi Manam, ஏதேனில் ஆதி மணம்.
KeyWords: Christian Song Lyrics, Tamil Christian Wedding Song Lyrics, Wedding Song Lyrics, Jolly Abraham, Minmini, Esther Baby, Sis. Hema John, Tamil christian wedding song, Christian wedding song lyrics, Tamil Christian Wedding song, Christian wedding song lyrics, Yethenil Aathi Manam song, Yethenil Aathi Manam song lyrics, Wedding songs, Marriage song.
Ethenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம்
Reviewed by
on
November 10, 2018
Rating:

No comments:
Post a Comment