Ninaivu Koorum Deivame - நினைவு கூரும் தெய்வமே



நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி

நன்றி இயேசு ராஜா

நோவாவை நினைவு கூர்ந்ததால்
பெருங்காற்று வீசச்
செய்தீரே - அன்று
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா

ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவைக் காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை
இரட்சியுமைய்யா

அன்னாளை நினைவு கூர்ந்ததால்
ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர்)
மாற்றுகிறீர் நன்றி ஐயா - எங்கள்

கொர்நெலியு தான தர்மங்கள் - ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே - அவன்

ராகேலை நினைவு கூர்ந்ததால்
யோசேப்பை பரிசாய் தந்தீரே
இன்னுமொரு மகனைத் தருவீர்
என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

எக்காளம் ஊதும் போதெல்லாம்
எங்களை நினைக்கின்றீர்
எதிரிகளின் கையிலிருந்து
இரட்சித்துக் காப்பாற்றுகிறீர்


Song Description: Tamil Christian Song Lyrics, Ninaivu Koorum Deivame, நினைவு கூரும் தெய்வமே.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, ninaivu koorum deivame lyrics, Ninaivu Koorum Deivame songs lyrics.

Ninaivu Koorum Deivame - நினைவு கூரும் தெய்வமே thumbnail Reviewed by on September 24, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.