En Meetpar En Nesar - என் மீட்பர் என் நேசர்

En Meetpar En Nesar - என் மீட்பர் என் நேசர்


Scale: E Minor - Ballad


என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் - நான்

மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது - தாகமாய்

பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன் - என்
கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் செயல்களை நினைத்துத் துதி
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார் - ஏங்குகிறேன்


Song Description: Tamil Christian Song Lyrics, En Meetpar En Nesar, என் மீட்பர் என் நேசர்.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol - 32, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal vol 32 songs, jebathotta jeyageethangal vol 32 songs lyrics, en meetpar en nesar songs, en meetpar en nesar songs lyrics.

Please Pray For Our Nation For More.
I Will Pray