The Vision - தரிசனம்



தரிசனம் உனக்குள் இருக்கும் கருவை போன்றது!
ஓடு உடையாமல்
முட்டையிலிருந்து குஞ்சு வெளி வர முடுயாது!
பிரசவ கால வலி இல்லாமல் 
செல்ல குழந்தை பிறக்காது!
கூடு கிழியாமல்
வண்ணத்துப்பூச்சி வெளியேறி பறக்காது!
விதை மண்ணுக்குள் புதைந்து வெடித்து வேர்களை தராமல்
அழகான செடி துளிர்த்து வராது!

எந்த கஷ்டமும் உழைப்பும் இல்லாமல்
உனக்குள் இருக்கும் தரிசனமும்
உயிர்பெற்று எழும்பாது!
தேவன் உனக்குள் தரிசனம்
(கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்காக வாழ்கிற ஒரு வாழ்க்கை)
என்னும்
கருவை பரிசுத்த ஆவியால்
உண்டாக்கி இருப்பாரானால்
அதை சுமப்பது உன் பொறுப்பு!
எப்பொழுதும் சுமை வலிக்கத்தான் செய்யும்
ஆனால் அதை
பாதுகாத்து
பக்குவத்தோடு
உடையாமல்
அழியாமல் பார்த்துக்கொள்வது உன் கடமை!
வலிக்கிறதே என்று
இறக்கி வைக்க பார்க்காதே!
வாடகை தாயை
அமைக்க பார்க்காதே!
அது உனக்கு கொடுக்கப்பட்டது.
உன்னுடையது!
ஒரு நாள் வரும்!
பத்து மாதங்கள் சுமந்து
தன் குழந்தையை
பெற்றெடுக்கும் தருணம்!
அந்த குழந்தை
முதலாவதாக அழும் நேரம்..
அந்த தாய்க்கு எப்படி
தன் துக்கத்தை மறக்கடித்து
சந்தோஷத்தை தருமோ
அதே போல
நீ சுமக்கிற தரிசனமும்
உன் கண் காண
வெளியே வந்து
உயிரோடு வளரும்போது
உனக்கு மட்டுமில்லாது
அநேகருக்கு ஆசிர்வாதமாய்
இருப்பதை பார்க்கும்போது
நீயும் சந்தோஷப்படுவாய்
உன் தேவனை நன்றியோடு துதிப்பாய்!
உன் கருவை நன்றாக போஷி
வேதம் என்னும் வைட்டமினை தவறாது உட்கொள்!
ஜெப நடை என்னும் அத்தியாவசிய உடற்பயிற்சியை மேற்கோள்!
அசதியா இராமல்
தூங்கும்போது கூட உன் கருவின் மீது
கண்ணோக்கமாயிரு!
பாதுகாத்துகொள்!
அது உன் தரிசனம்!
சத்துரு அழிக்க துடிப்பான்!
"ஐயோ இந்த குழந்தை பிறந்துவிட்டால்?
என் திட்டம் எல்லாம் பாழாய் போகுமே"
விடாதே!
தேவ பிரசன்னம் என்னும்
சுத்தமான சூழலில்
கருவை வளர்த்து வா!
உன் கரு உன் துதியின் சத்தத்தை கேட்கப்பண்ணு!
நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும்..
அந்த தரிசனம் பிறந்த பிறகும்!
அது பிறந்தாலும்
வளர்ந்தாலும்
தரிசனம் உன்னுடையது!
அதின் நோக்கம் நிறைவேறும் வரைக்கும்
உன் கடமையை ஆற்று!
உன்னை பார்ப்போர் சொல்லுவார்கள்
"அதோ போகிறாரே இவன் தான், இவள் தான்
அந்த தரிசனத்தை பெற்ற பாக்கியவான்,
பாக்கியவாள்"..என்று!
உனக்குள் அந்த கருவை அனுப்பிய
தேவன் சொல்லுவார்..
"இவன் என்னுடையவன்,
எனக்கு பிரியமானவன்/பிரியமானவள்!"
தரிசனத்தை சுமக்கிறாயா?
அதற்க்கு உண்மையாயிரு!
அதற்கு செய்யவேண்டியதை செய்!
வலியா? வேதனையா?
பொறுத்துக்கொள்!
வலி மட்டுமே வாழ்க்கை இல்லை!
எந்த வாழ்க்கையும் வலி இல்லாமல் இல்லை!
உன் தரிசனமே உன் நோக்கமாயிருக்கட்டும்!
ஒரு நாள் சிரிப்பாய்,
தேவனை மனதார துதிப்பாய்,
கண்ணீரோடு!!

இப்படிக்கு
தேவனின் தரிசனங்களை சுமக்கும் நான்!


Bro. Godson GD

Description: Devotional Tamil Message By Bro. Godson GD
Keywords: Bro. Godson GD, Devotional, Tamil Devotional Message.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.