Sugam Tharavendum - சுகம் தரவேண்டும்

Sugam Tharavendum - சுகம் தரவேண்டும்



சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா - இன்று
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால்  - 2

நிமிரமுடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர்
நிரந்தாரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர் -சுகம்

தொழுநோய்கள் சுகமானதே
உம் திருக்கரம் தொட்டதால்
கடும் வியாதிகள் விலகியதே
உமது வல்லமையால்

பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே

லேகியோனை தேடிச் சென்று
உம்பாதம் அமரச் செய்தீர்
தெக்கப்போலி நாடெங்கும்
உம் நாமம் பரவச் செய்தீர்

பேதுரு மாமி குணமாக்கினீர்
பணிவிடை செய்ய வைத்தீர்
பேய் பிடித்த அநேகரை
அதட்டி விடுவித்தீர்


Song Description: Tamil Christian Song Lyrics, Sugam Tharavendum, சுகம் தரவேண்டும்.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol - 30, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal songs lyrics, sugam tharavendum songs,sugam tharavendum songs lyrics.

Please Pray For Our Nation For More.
I Will Pray