Ne Malaimel Ulla - நீ மலைமேல் உள்ள


நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி - 2
எழுந்து ஒளி வீசு - 2

1. உலகின் ஒளியாய் வாழ தேவன்
உன்னை அழைத்தார்
அவர்க்காய் சாட்சியாய் வாழ
தேவன் உன்னை அழைத்தார்
கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட
சாட்சியாய் நீ வாழ்வாய்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) - 2

2. அழிகின்ற ஜனங்களை மீட்க
தேவன் உன்னை அழைத்தார்
திறப்பின் வாசலில் நிற்க
தேவன் உன்னை அழைத்தார்
அறுவடை மிகுதி வேலையாள் குறைவு
தேவ ஊழியம் செய்வாய்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) - 2

3.  இருளின் அதிகாரம் உடைக்க
வல்லமை உனக்களித்தார்
பூமியில் அக்கினியை இறக்க
வரங்களை உனக்களித்தார்
பாதாளத்தை வெறுமையாக்கி
பரலோகத்தை நிரப்ப
திறவுகோல் உனக்களித்தார்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி - 2
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழுந்து ஒளி வீசு - 2




Song Description: Tamil Christian Song Lyrics, Ne Malaimel Ulla, நீ மலைமேல் உள்ள.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Ne Malaimel Ulla Pattanam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.