Nam Yesu Nallavar - நம் இயேசு நல்லவர்


Scale: F Minor - 4/4


நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்

அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார் - உனக்கு

கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் - இன்று

எதிர்காலம் நமக்குண்டு
எதற்க்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை - நாம்

நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் - இன்று
குறையெல்லாம் நீக்குவார் - உன்

நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்

எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நிட்டித் தேற்றுவார்

என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட
மறுரூபமாக்குவார்


Songs Description: Tamil Christian Song Lyrics, Nam Yesu Nallavar, நம் இயேசு நல்லவர்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.