Ezhunthu Bethelukku Po - எழுந்து பெத்தேலுக்கு போ

Ezhunthu Bethelukku Po - எழுந்து பெத்தேலுக்கு போ


Scale: E Minor - 2/4


எழுந்து பெத்தேலுக்கு போ
அதுதானே தகப்பன் வீடு
நன்மைகள் பல செய்த
நல்லவர் இயேசுவுக்கு
நன்றி பாடல் பாடணும்
துதி பலிபீடம் கட்டணும்

ஆபத்து நாளிலே பதில் தந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்
நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்

அப்பா தகப்பனே நன்றி நன்றி -2
எழுந்து பெத்தேல் செல்வோம்

போகுமிடமெல்லாம் கூடயிருந்து
காத்துக் கொள்வேனென்றீர்
சொன்னதைச் செய்து
முடிக்கும் வரைக்கும்
கைவிட மாட்டேனென்றீர்

பிறந்தநாள் முதல்
இந்நாள் வரைக்கும்
ஆதரித்த ஆயரே
ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
வணங்கிய எங்கள் தெய்வமே

எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி
என்னை மீட்டீரையா
வாழ்நாள் முழுவதும்
மேய்ப்பனாயிருந்து
நடத்தி வந்தீரையா

படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
என்று வாக்குரைத்தீரையா
பலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம்
என்று வாக்குரைத்தீரையா

அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
அகற்றி புதைத்திடுவோம்
ஆடை மாற்றுவோம் தூய்மையாக்கும்வோம்
பாடிக் கொண்டாடுவோம்

வெறுங்கையோடு பயந்து
ஓடிய யாக்கோபை
தெரிந்து கொண்டீர்
இஸ்ராயேல் இனமாய் ஆசீர்வதித்து
பலுகிப்பெருகச் செய்தீர்


Songs Description: Tamil Christian Song Lyrics, Ezhunthu Bethelukku Po, எழுந்து பெத்தேலுக்கு போ.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Elunthu Bethelukku Po, 
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt. 

Please Pray For Our Nation For More.
I Will Pray