Yeruhintraar Thallaadi - ஏறுகின்றார் தள்ளாடி
ஏறுகின்றார் தள்ளாடி
தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கதா மலையின்
மேல் நடந்தே ஏறுகின்றார்
1. கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்
2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார்
3. இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசுநாதரை
நேசித்து வா குருசெடுத்தே
4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்
5. பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்
6. செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்த தாயின் அன்பதுவே
எருசலேமே! எருசலேமே
என்றழுதார் கண்கலங்க
Song Description: Tamil Christian Song Lyrics, Yeruhintraar Thallaadi - ஏறுகின்றார் தள்ளாடி
KeyWords: Communion song Lyrics, Good Friday Song Lyrics.
Yeruhintraar Thallaadi - ஏறுகின்றார் தள்ளாடி
Reviewed by
on
June 02, 2018
Rating:
