Kalangathe En Magane - கலங்காதே என் மகனே



கலங்காதே என் மகனே 
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான் 
என்றும் உன்னோடிருக்கின்றேன் - 2

என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு  - 2

கலங்காதே என் மகனே 
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான் 
என்றும் உன்னோடிருக்கின்றேன்

உனக்காய் உலகில் வந்தேன் 
உனக்காய் ஜீவன் தந்தேன் 
எந்தன் ரத்தம் சிந்தி 
உன்னை வாங்கிக்கொண்டேன் - 2

என் பிரியமே நீ என்னுடையவன் 
எனக்கெல்லாம் மகனே நீயே 
என் பிரியமே நீ என்னுடையவள்
எனக்கெல்லாம் மகளே நீயே 

என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு - 2

கலங்காதே என் மகனே 
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான் 
என்றும் உன்னோடிருக்கின்றேன்

உனக்காய் யாவும் செய்வேன் 
உன்னோடென்றும் வருவேன் 
எந்தன் தோளில் ஏந்தி 
உன்னை சுமந்து செல்வேன் 

என் சிறகுகளால் உன்னை
மூடிக்கொண்டேன் 
என் வலக்கரத்தால் உன்னை
அணைத்துக்கொண்டேன் - 2

என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு - 2

கலங்காதே என் மகனே 
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான் 
என்றும் உன்னோடிருக்கின்றேன் - 2



Song Description: Tamil Christian Song Lyrics, Kalangathe En Magane,கலங்காதே என் மகனே
KeyWords: Lionel Lucas, Kalangathae En Maganae, Appa Song, Christian Song Lyrics, Kalangaathe En.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.