Bible - வேதம்
📖
வேதம்
1. தினம் (அதிகாலையில்) வேதம் வாசிக்க வேண்டும்.
2. (குறைந்த பட்சம்) முழு வேதாகமத்தையும் ஒரு வருடத்தில் வாசித்து முடிக்க வேண்டும்.
3. வேதம் நமது ஆத்துமாவிற்குச் சத்துணவு இதை (அதிகம்) உட்கொள்ள உட்கொள்ள நமது ஆத்துமா புஷ்டியாகி நாம் பெலப்படுவோம்; எதிராளியை எளிதில் மேற்கொள்ளலாம்.
4. எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேதவசனங்களை மனப்பாடம் செய்துக் கொள்ள வேண்டும்.
5. எதிராளியை வீழ்த்த வேதம் நல்ல ஆயுதம்.
6. ஒத்தவாக்கிய வேதம் உபயோகியுங்கள்.
7. வேதத்தின் நாயகர் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
8. வேதத்தைக் தலையணையாக உபயோகிக்கக் கூடாது.
9. வேத புத்தகத்தில் தூசி படிந்திருந்தால் அதை நீங்கள் உபயோகிக்க வில்லை என்று அர்த்தம்.
10. வேதத்தை அலமாரியில் வைக்காமல் இருதயத்தில் வைக்க வேண்டும்.
கர்த்தருக்கே மகிமை உண்டாகுவதாக