அமர்ந்திருப்பேன் உம் அருகினிலே
மறைந்திருப்பேன் உம் நிழலினிலே
உம் மடியில் நான் இளைப்பாறுவேன்
உம் அடியில் நான் இளைப்பாறுவேன்
நான் இளைப்பாறுவேன்
1. மலைகள் விலகிப் போனாலும்
உங்க கிருபை விலகுவதில்லை
காலங்கள் மாறிச் சென்றாலும்
உந்தன் அழைப்பு மாறுவதில்லை
உருக்கமான இரக்கங்களால்
என்னையும் நீர் சேர்த்துக்கொள்வீர்
சிருஷ்டிகரே என் நாயகரே
2. கருவிலே என்னை முன்குறித்து
நடத்தி வந்தவர் நீரே
ஆச்சரியமாய் என்னை போஷித்து
ஆதரித்தவரும் நீரே
தீங்கு நாளில் என்னை மறைத்து
கூடார மறைவில் ஒளித்து வைத்தீர்
தகப்பனே என் ஆதாரமே
Tanglish
[keywords] Ilaipaaruven - இளைப்பாறுவேன், Isaac D, Ilaipaaruvaen, Amarnthirupaen, Amarntherupaen, Amarndhirupaen, Tamil Christian Song.
