உம் சமூகத்தின் அடையாளமான பர்வதம்
உம் வார்த்தையை ஆதாரமாய் கொண்ட பர்வதம்
அரணான நகரமான சீயோன் பர்வதம்
நான் ஆசையாய் ஓடி வரும் சீயோன்பர்வதம்-என்
1.வலக்கரம் சம்பாதித்த பர்வதம்
பூரண வடிவுள்ள பர்வதம்
தேவன் பிரகாசிக்கும் பர்வதம்
நீர் விரும்பி வாசம் பண்ணும் பர்வதம்
என்றென்றும் அசையாத பர்வதம்
ராஜாவின் (மகாராஜாவின் ) நகரமான
சீயோன் பர்வதம் - இது
2. ஆயிரம் பதினாயிரம் தூதர்கள்
பேரெழுதப்பட்ட முதற்பேறானவர்கள்
நியாதிபதியாகிய தேவனும்
நன்மை பேசும் இயேசுவும் அவர் ரத்தமும்
என்றென்றும் வாசம்பண்ணும் பர்வதம்
ஜீவனுள்ள தேவன் தங்கும்
சீயோன் பர்வதம் - இது
3. அப்பத்தால் திருப்தியை தருகிறீர்
ஆராதிக்க வெற்றியை தருகிறீர்
வெளிச்சம்காட்ட விளக்காக வருகிறீர்
அனல்மூட்டி புது பெலன் தருகிறீர்
என் கோலை துளிர்க்க செய்கிறீர்
என் கிரீடம் பூக்கச் செய்யும்
சீயோன் பர்வதம் - இங்கு
Tanglish
[keywords] Seeyon Parvatham - சீயோன் பர்வதம், Joseph Aldrin, Zion Parvatham, Siyon Parvatham, Um Samugathin, Um Samugatheen, Tamil Christian Song.
