Samadhanam - சமாதானம்




 

உலகம் தரக்கூடாத சமாதானத்தை
உங்களுக்காக வைத்து போகிறேன்
என்றவரே அவர் உண்மையுள்ளவர்

இருதயம் கலங்காமலும்
ஒரு போதும் பயப்படாமலும்
பூரண சமாதானத்தால் காத்துக்கொள்வார்

இயேசுவே சமாதான காரணரே
இயேசுவே சமாதான பிரபுவே
இயேசுவே சமாதான காரணரே
எங்கள் இயேசுவே சமாதானம் பிரபுவே

1. திரலான கூட்டம் என்னை எதிர்த்தார்கள்
விமர்சன வார்த்தைகளால் நகைத்தார்கள்
கர்த்தரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி
ஆத்துமாவை சமாதானத்தாலே மீட்டாரே

2. வியாதிகளை உன்னை விட்டு விளக்கிடுவார்
சுக வாழ்வை சீக்கிரத்தில் துளிர்க்க செய்வார்
கர்த்தரோ உனக்கு நேரிட்ட வியாதி நீக்கி
சரீரத்தை சமாதானத்தாலே காப்பாரே
 

Tanglish

[keywords] Samadhanam - சமாதானம், Stella Ramola, Daniel Davidson, Samathanam, Ulagam Tharakudaatha, Ulagam Thara Kuda tha, Tamil Christian Song.