பெருமழையைப் போலவே ஊற்றுங்கப்பா
பின்மாறி மழையாய் ஊற்றுங்கப்பா
உலர்ந்த எலும்புகள் உயர் அடையணுமே
பலத்த சாட்சியாய் எழும்பி நிற்கணுமே
அக்கினியாய் ஊற்றுங்கப்பா
அன்பின் ஆவியே தூய ஆவியே
அன்பின் ஆவியே பெலத்தின் ஆவியே
மாம்சமான யாவர்மேலும் ஊற்றும் ஆவியே
ஊற்றுங்கப்பா உங்க ஆவியை
பலமாக ஊற்றுங்கப்பா
எங்க தேசத்தின் மேல் ஊற்றுங்கப்பா
எங்க சபைகளின் மேல் ஊற்றுங்கப்பா
1. இருள் நிறைந்த தேசமெல்லாம்
வெளிச்சம் ஆகணும்
நீதிமான்கள் பெருகி களிகூரணும்
வேத வசனம் வளர்ந்து விருத்தி ஆகணும்
பூரண கிருபை பெற்று ஜனங்கள் மகிழனும்
2. தேவன் கொடுத்த மீட்பை ஜனங்கள் அறியணும்
சுவிசேஷத்தின் வெளிச்சம் எங்கும் சொல்லணும்
இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சம் பார்க்கணும்
மெய் தெய்வம் இயேசு என்று உலகம் அறியும்
3. அருவருப்பின் ஆவிகள் அழிய வேண்டுமே
அந்தகார வல்லமை ஒழிய வேண்டுமே
இரட்சிப்பின் சந்தோஷத்தால் நிரம்ப வேண்டுமே
தேவனின் ராஜ்ஜியம் இறங்க வேண்டுமே
Tanglish
[keywords] Perumazhai Polavae - பெருமழையை போலவே, Pastor Lucas Sekar, Perumalai Polavae, Perumazhai Polave, Perumalai Polave, Tamil Christian Song.
