உயிரினும் மேலானவர்
உண்மையில் மாறாதவர்
உத்தமரே உம்மை நேசிக்கின்றோம்
உன்னதரே உம்மை உயர்த்துகின்றோம்
அல்லேலூயா உம்மை போற்றுவோம்
அல்லேலூயா உம்மை ஆராதிப்போம்
அல்லேலூயா மேன்மைப்படுத்துவோம்
நீர் சர்வ வல்ல தேவன்
1.நீங்க செய்த நன்மையால்
எங்கள் உள்ளம் நன்றியால்
பாசத்தோடு புகழ்வோம்
பாிசுத்தத்தோடு தொழுவோம்
எங்கள் வாழ்நாளெல்லாம்
சாட்சியாக நிற்போம்
2.கடந்து வந்த பாதைகள்
காத்த உந்தன் கிருபைகள்
காலமெல்லாம் நினைப்போம்
கர்த்தர் வாக்குத்தத்தம் மறவோம்
உந்தன் வார்த்தையினால்
என்றும் முன்னேறுவோம்
3.காத்திருந்த காலங்கள்
கழுகைப் போல மாற்றங்கள்
ஆவியோடு துதிப்போம்
அபிஷேகத்தாலே நிறைவோம்
உந்தன் பெலத்தினால்
உயர எழும்புவோம்
Tanglish
[keywords] Uyirilum Maelaanavar - உயிரினும் மேலானவர், Melvin Manesh, Jesudhas Vishwanathan, Uyirinum Maelanavar, Uyirinum Melaanavar, Tamil Christian Song.
