Emmathiram - எம்மாத்திரம்




 

நீர் காண்பித்த தயவிற்கு பாத்திரனோ 
உம் அன்பின் அழைப்பை மறப்பேனோ 

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்
உம் அன்பை விளங்கிட முடியவில்லை
உம் தயவை விவரிக்க வார்த்தை இல்லை

1.நன்மைகள் தினமும் காணச் செய்தீர்
உம் கரங்களின் கிரியைகள் ருசிக்கச் செய்தீர்
உம் கிருபைகள் தினமும் புதிதல்லவோ 
உம் இரக்கங்கள் வானத்தின் அளவல்லவோ

2.தரிசனம் என்னில் வைத்தவரே
நான் மறப்பினும் நீர் அதை நினைத்திட்டீரே
நீர் நிறுத்தின இடங்கள் என் தகுதியல்ல
உம் கிருபையின் வெளிப்பாடு அவைகளல்லோ

3.உலகில் என் வெற்றிகள் பெரிதல்லவே 
உம்மோடு இருப்பதே நிறைவானதே 
என் கண்களை மூடிடும் அந்நேரமே 
உம் சமூகத்தில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
 

Tanglish

[keywords] Emmathiram - எம்மாத்திரம், Livingstone Michaelraj, Jemimah James, Emaathiram, Neer Kaanbiththa, Neer Kaanbitha, Worship Song, Tamil Christian Song.