Ummai Naan Padiduven - உம்மை நான் பாடிடுவ




 

உம்மை நான் பாடிடுவேன்
உம் பாதம் அமர்ந்திடுவேன்
உம்மை நான் நோக்கி பார்த்து
உன்னத பலன் அடைவேன்
இயேசுவே இயேசுவே
இயேசுவே என் இயேசுவே

சோர்வுற்ற நேரம், மனம் தளர்ந்த வேளை
உம் வார்த்தையால் தேற்றினீரே
உம் வாக்குகள் என்னை உயிர்ப்பித்ததே
உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே இயேசுவே
இயேசுவே என் இயேசுவே

கலங்கின நேரம், உடைந்திட்ட வேளை
உம் வார்த்தையால் தேற்றினீரே
உம் வாக்குகள் என்னை உயிர்ப்பித்ததே
உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே இயேசுவே
இயேசுவே என் இயேசுவே
 

Tanglish

[keywords] Ummai Naan Padiduven - உம்மை நான் பாடிடுவேன், Sudhakaran Samuel, Ben Samuel, Ummai Naan Paadiduvaen, Ummai Naan Paadiduven, Tamil Christian Song.