ஓய்வில்லாமல்உம்மைதுதித்திட
உம் ஆவி ஊற்றுமையா
ஒரு மனதோடு ஆராதனைசெய்ய
மத்தியில் வாருமையா
நல்லவரே நன்மை செய்பவரே
துணையாளரே என்னை நிரப்பிடுமே
பரிசுத்தரே என் பரிகாரியே
தூயாவியே எம்மை நிரப்பிடுமே
1. திடமான இருதயம் என்னில் தாரும்
தளராமல், தயங்காமல் முன்சென்றிட
தாழ்மையின் இருதயம் கற்றுத்தாரும்
வாழ்விலும், தாழ்விலும் நன்றி சொல்ல
பட்டினியோ பரிபூரணமோ
வறட்சியிலோ திரட்சியிலோ
திருப்தியாய் வாழ்ந்திடும் பெலனீந்திடும்
2. பரிசுத்த இருதயம் என்னில் தாரும்
பரலோக தேவனைதரிசித்திட
சத்திய ஆவியே கற்றுத்தாரும்
நித்திய வாழ்க்கையின்ரகசியத்தை
இம்மையிலும் மறுமையிலும்
மரணத்திலும் மறுவாழ்வினிலும்
உம்மைவிட்டு பிரியாத வரம் ஈந்திடும்
Tanglish
[keywords] Parisutharae - பரிசுத்தரே, Kingsly Sivapragasam, Oyvillamal Ummai, Tamil Christian Song.
