தாய்ப் பறவை போல
என்னை பாதுகாக்கிறீர்
சேதமேதும் இல்லாமல்
தூக்கி சுமக்கிறீர்
கண்ணீரை துடைக்கிறீர்
காயங்களை கட்டுகிறீர்
கரம்பிடித்து கருத்தாய்
வழி நடத்துகிறீர்
காப்பவரே சுமப்பவரே
உள்ளங்கையிலே வரைந்தவரே
1. மறைவான கண்ணிகளுக்கு
விலக்கிக் காக்கிறீர்
வேடன் எய்யும் அம்புகளுக்கும்
தப்புவிக்கிறீர்
மான் கால்களைப் போல
என் கால்களை மாற்றி
உயரமான மலைகளின் மேல்
நடக்கப்பண்ணுகிறீர்
2. எதிரிகளின் கண்ணுக்குமுன்னே
விருந்து படைக்கிறீர்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்புதே
நிரம்பி நிரம்பி வழியுதே
நன்மைகளும் கிருபைகளும்
என்னை தொடருதே
3. எனக்கெதிராய் படையெடுப்போர்
நிலைப்பதில்லையே
மந்திரமோ தந்திரமோ
பலிப்பதில்லையே
நானே உன் தேவன்
நீதான் என் தாசன் நீயே என் பிரியம்
என்றுரைத்த வாக்குகளை
மறப்பதில்லையே
Thaai Paravai Pola
Ennai Paadhukaakkireer
Sedham Yedhum Illaamal
Thookki Sumakkireer
Kanneerai Thudaikkireer
Kaayangalai Kattugireer
Karam Pidiththu Karuththaai
Vazhi Nadaththugireer
Kaappavarae Sumappavarae
Ullangaiyilae Varaindhavarae
1. Maraivaana Kannigalukku
Vilakki Kaakkindreer
Vedan Eyyum Ambugalukkum
Thappuvikkireer
Maan Kaalgalai Pola
En Kaalgalai Maatri
Uyaramaana Malaigalin Mel
Nadakka Pannugireer
2. Ethirigalin Kannukku Munnae
Virundhu Padaikkireer
En Thalaiyai Ennaiyinaal
Abishaegiththeer
En Paaththiram Nirambudhae
Nirambi Nirambi Vazhiyudhae
Nanmaigalum Kirubaigalum
Ennai Thodarudhae
3. Enakkedhiraai Padai Eduppor
Nilaippadhillaiyae
Manthiramo Thanthiramo
Balippadhillaiyae
Naanae Un Dhevan
Needhaan En Dhaasan
Neeyae En Piriyam
Endruraiththa Vaakkugalai
Marappadhillaiyae
[keywords] Thaai Paravai - தாய் பறவை, Caleb Keerthishwaran, Praiselin Stephen, Thai Paravai Pola, Tamil Christian Song.
