Balipeedamae - பலிபீடமே

Balipeedamae - பலிபீடமே





 

பலிபீடமே பலிபீடமே கர்த்தரின் பலிபீடமே-2
எரியட்டுமே எரியட்டுமே பரிசுத்த அக்கினியே

எங்கள் தேசம் மறுரூபம் ஆகணுமே
எங்கள் சபைகள் உயிர் பெற்று எழும்பணுமே
அந்த பாகாலின் பலிபீடம் அழியணுமே
எங்கள் தேசத்தின் தீட்டெல்லாம் எரியணுமே

கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் 
எங்கும் முழங்கணுமே
உயிர் பெற்று எழும்பணுமே-2
அல்லேலூயா அல்லேலூயா-4

1.பின்மாறி மழைக்காக வேண்டிடுவோம்
ஆசீர்வாத மழை பொழிந்திடுவார்
இரட்சிப்பின் சந்தோஷத்தால் மகிழ்வோம்
பாக்கியமாம் சுவிசேஷத்தை சொல்லுவோம்
நான்கு திசை எங்கும் பறைசாற்றுவோம்
இயேசுவே மெய்யான தெய்வம் என்று  -2 

கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
எங்கும் முழங்கிடுவோம்
உயிர் பெற்று எழும்பிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா-4

2.அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும்
பூரண இரட்சிப்பை நிறைவேற்றுவோம்
காலம் கொடியதாய் வருகின்றதே
இயேசுவை அண்டி நாம் நடந்திடுவோம்
கோடான கோடி மக்கள் இங்கே
நரகத்தின் பாதையில் செல்கின்றாரே
அவர்களின் மீட்புக்காய் போராடுவோம்
இயேசுவே வழி என்று சொல்லிடுவோம்
- கர்த்தரே தெய்வம்

3.பூரண கிருபையை பெற்றிடுவோம்
குறைவின்றி கிருபையால் வாழ்ந்திடுவோம்
ஆவியின் வரங்களை பெற்றிடுவோம்
கிறிஸ்துவின் சபையை நாம் அலங்கரிப்போம்
மகிமையின் மேல் மகிமை அடைந்திடுவோம்
மறுரூபம் ஆகி நாம் சென்றிடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே
மகிமையிலே நாம் தரிசிப்போமே
- கர்த்தரே தெய்வம்
 

Balipeedame Balipeedame Kartharin Balipeedame -2
Eriyattume Eriyattume Parisuttha Akkiniye

Engal Desam Maruroopam Aaganume
Engal Sabaigal Uyir Petru Ezumbanume
Andha Paagalin Balipeedam Azhiyanume
Engal Desaththin Theettellaam Eriyanume

Karthare Dheivam Karthare Dheivam
Engum Muzhanganume
Uyir Petru Ezumbanume -2
Alleluya Alleluya -4

1. Pinmaari Mazhaikaaga Vaendiduvoam
Aaseervadha Mazhai Pozhindhiduvaaar
Iratchippin Santhoshaththaal Magizhvoam
Baakkiyamaam Suviseshaththai Solluvoam
Naangu Thisai Engum Paraichaatruvoam
Iyesuve Meyyaana Dheivam Endru -2

Karthare Dheivam Karthare Dheivam
Engum Muzhangiduvoam
Uyir Petru Ezumbiduvoam
Alleluya Alleluya -4

2. Adhiga Bayaththodum Nadukkaththodum
Poorana Iratchippai Niraivetruvoam
Kaalam Kodiyathaai Varugiradhathe
Iyesuvai Andi Naam Nadandhiduvoam
Kodaana Kodi Makkal Inge
Narakaththin Paathaiyil Selgirare
Avargalin Meedpukkaai Poraaduvoam
Iyesuve Vazhiyendru Solliduvoam
- Karthare Dheivam

3. Poorana Kirubaiyai Petriduvoam
Kuraivinri Kirubaiyaal Vaalndhiduvoam
Aaviyin Varangalai Petriduvoam
Kiristuvin Sabaiyai Naam Alangarippoam
Magimaiyin Mel Magimai Adaindhiduvoam
Maruroopam Aagi Naam Sendriduvoam
Raajaadhi Raajaavaam Iyesuvaiye
Magimaiyile Naam Darisippoame
- Karthare Dheivam


[keywords] Balipeedamae - பலிபீடமே, Palipeedame, Balipeedame, Palipeedamae, Pr.Lucasekar Sekar.