Aarivar Aaraaro - ஆர் இவர் ஆராரோ





 

ஆர் இவர் ஆராரோ
இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த
இவ்வற்புத பாலகனார்

1. பாருருவாகுமுன்னே - இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? - ஆர் இவர்

2. மேசியா இவர்தானோ? – நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
அதி அன்புள்ள மனசானோ? - ஆர் இவர்

3. தித்திக்குந் தீங்கனியோ? - நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசய மேவிய விண் ஒளியோ? - ஆர் இவர்

4. பட்டத்துத் துரைமகனோ?
நம்மை பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? - ஆர் இவர்

5. ஜீவனின் அப்பமோதான்?
தாகம் தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
அடைக்கலமானவர் இவர்தானோ? - ஆர் இவர்



Aar Ivar Araaro
Intha Avaniyom Maathidame
Aanadai Kudilidai Monamaai Uthittha
Ivvarpputha Paalaganaar

1. Paaruruvaagumunne Iruntha
Parapporum Thaanivaro
Seerudan Puvi Vaan Avai Porul Yaavaiyum
Sirushtittha Maavalar - Aar Ivar

2. Mesiah Ivarthaano
Nammai Meitthidum Nararkono
Aasaiyaai Manitharukkai Maritthidum
Athi Lanbulla Manasaano - Aar Ivar

3. Thitthikkum Theenganiyo
Namakku Thevanin Kanmaniyo
Metthave Ulakirul Neekkidum
Athisaya Meviya Vin Ozhiyo - Aar Ivar

Pattatthu Thuraimagano
Nammai Panpudan Aalbavano
Kattalai Meeridum Yaavarkkum Mannippu
Kaattidum Thaayagano - Aar Ivar

Jeevanin Appamothaan
Thaagam Theertthidum Baanamothaan
Aavalaai Ezhaigal Adaikkalam
Adaikkalamanavar Ivalrthaano - Aar Ivar



Song Description: Aarivar Aaraaro, ஆர் இவர் ஆராரோ.
Keywords: Tamil Christian Song Lyrics, Aar Ivar Aararo.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.