En Piriyamae - என் பிரியமே!



என் பிரியமே! என் ராஜாவே!
என் நேசரே! என் இயேசுவே!
உமக்கே ஆராதனை! உமக்கே ஆராதனை! - 4

1. உம்மைப் பிரிந்து எங்கே செல்வேன்
வாழ்வு தரும் வார்த்தை
உம்மிடம்தானே - 2
- உமக்கே

2. ஆழத்திலிருந்து அழுதேன் ஐயா
கைதூக்கி களிக்கச் செய்தீரையா - 2
- உமக்கே

3. வழி தெரியாமல் திகைத்து நின்றேன்!
ஒளி ஸ்தம்பமாய் எந்தன் முன்னே சென்றீர்! - 2
- உமக்கே

4. அபிஷேகம் தந்து அணைத்தீரைய்யா!
ஆவியில் மகிழச் செய்தீரையா - 2
- உமக்கே

5. உம் வசனம் தந்து பசி தீர்த்தீரே!
உபதேசம் தந்து உணர்த்தினீரே! - 2
- உமக்கே

6. விண்ணகம் எதிர் நோக்கி வாழச் செய்தீர்!
விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஈந்தீர்! - 2
- உமக்கே

7. தந்தையே! இயேசுவே! தூயாவியே!
திரித்துவ தெய்வமே பணிகின்றேன்! - 2
- உமக்கே


Song Description: Tamil Christian Song Lyrics, En Piriyamae, என் பிரியமே!.
KeyWords: Christian Song Lyrics, John F. Aruldoss.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.