எனது வாஞ்சையே
உங்க பிரசன்னமே பிரசன்னமே
எனது தேவையே
தொலைந்து போன என்னை
தேடி வந்த பிரசன்னமே
தோளின் மேல் சுமந்து செல்லும்
உங்க பிரசன்னமே
வெறுத்திடாமல் அணைத்துக் கொள்ளும்
உங்க பிரசன்னமே
அழித்திடாமல் அழகு பார்க்கும்
உங்க பிரசன்னமே
- உங்க பிரசன்னமே
வாதை என்னை அணுகாமல்
காத்த பிரசன்னமே
பொல்லாப்பு நேரிடாமல்
சூழ்ந்த பிரசன்னமே
செட்டைகளின் நிழலிலே
காத்த பிரசன்னமே
இரத்தத்தின் மறைவிலே
காத்த பிரசன்னமே
- உங்க பிரசன்னமே
கால்களை பெலப்படுத்தும்
உங்க பிரசன்னமே
உயர்ந்த ஸ்தலத்தில் நிறுத்திடும்
உங்க பிரசன்னமே
குறைவுகளை மாற்றிடும்
உங்க பிரசன்னமே
நிறைவுகளை தந்திடும்
உங்க பிரசன்னமே
- உங்க பிரசன்னமே
KeyWords: Christian Song Lyrics, Dr. Joshuah Daniel, Unga Prassannamae, Unga Prasanname.