Nadathiyavar - நடத்தியவர்
கண்ணீர் சிந்தும் வேளையில்
நம்பினோர் கைவிட்டனரே
அன்று நானும் தனிமையில்
நின்று தவித்தேனே
நினையா அந்த வேளையில்
உடைந்த என் காதையில்
காதலனாய் தேவன் வந்தீரே
பிரியாத ஓர் காதலை
எனக்குத் தந்தீரே
நடத்தியவர் நடத்துபவர்
நீரே தகப்பனே
நடத்திவந்த பாதைகள்
கண்ணீர் சுவடுகள்
திரும்பி பார்க்கின்றேன்
அவைதான் இன்று இன்பங்கள்
நம்பியிருந்த மனிதரும்
சூழ்நிலையால் கைவிட
நட்டாற்றில் தவித்து நின்றேனே
அன்றும்கூட விசாரிக்க ஒருவரில்லையே
வழி தெரியா என்னையும்
உடைந்த என் மனதையும்
காயம் கட்டி நடத்தி வந்தீரே
புதியதோர் மனிதனாய்
என்னை மாற்றினீர்
தள்ளப்பட்ட என்னையும்
உலகம் அதின் பார்வையில்
தோற்றத்தால் நீதி செய்ததே
ஆனால் நீரோ கூட நின்று
தோள் கொடுத்தீரே
கிரகிக்கக்கூடா நன்மைகள்
செய்த உம் அன்பிற்காய்
என்னதான் ஈடாய் கொடுப்பேனோ
உம் சார்பிலே பிறருக்கு
பாதை காட்டுவேன்
Song Description: Tamil Christian Song Lyrics, Nadathiyavar, நடத்தியவர்.
KeyWords: Jonal Jeba, Nadatthiyavar Nadathubavar.
Nadathiyavar - நடத்தியவர்
Reviewed by
on
June 16, 2022
Rating:

No comments:
Post a Comment