இரட்சிப்பின் கெம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும்
நீதிமான் நான் நீதிமான்
இரத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்
நீதிமான் நான் நீதிமான்
கிருபையாலே உயர்த்தப்பட்ட நீதிமான்
ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போல
தைரியமாய் எழுந்து நிற்கும் நீதி நீதிமான் - 2
நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டு
தன் காலத்தில் கனிதரும் நீதிமான்
இலைகள் உதிரா மரம் நானே
நான் செய்வதெல்லாம் வாய்க்கும் நீதிமான்
- நீதிமான் நான்
காருண்யம் என்னும் கேடகத்தால்
கிருபையினால் சூழ்ந்துகொண்ட நீதிமான்
சாவாமல் என்றும் பிழைதிருந்து
கர்த்தர் செய்கையினை விவரிக்கும் நீதிமான்
- நீதிமான் நான்
என் ஊக்கமான வேண்டுதல் பெலனுள்ளதால்
மாற்றங்கள் செய்யும் நீதிமான்
ஓ கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால்
நீதியாய் மாறின நீதிமான்
- நீதிமான் நான்
Songs Description: Tamil Christian Song Lyrics, Neethiman Anthem, நீதிமான் கீதம்.
KeyWords: Henley Samuel, Neethimanin Koodarathil, Henley Samuel, Sammy Thangiah, Issac D, Giftson Durai.