En Uyir Yesuvae - என் உயிர் இயேசுவே




என் உயிர் இயேசுவே நீரே 
என்னை நித்தமும் நடத்தினீரே
நீதியின் பாதையில் என்னை
தினமும் அழைத்து சென்றிரே – 2

என் உலகம் நீரே, என் வாழ்வும் நீரே - 2
என் வழியும் நீரே என் துணையும் நீரே
- என் உயிர் 

1. தாய் தந்தை என்னை கைவிட்டாலும்
உற்றார் உறவினர் வெறுத்திட்டாலும் - 2
உயிரின் உயிர் என்று சொன்னவர்கள்
உதறி என்னை தள்ளினாலும் - 2
உம கரம் என்னை தாங்கினதே - 2

 என் தாயும் நீரே, என் தந்தை நீரே - 2
என் ஆதரவே, என் உயிரும் நீரே
- என் உயிர் இயேசுவே நீரே 

2. வியாதி படுக்கையில் நான் கிடந்தாலும்
பெலனற்று, உடல் சோர்ந்திருந்தாலும் - 2
உலகம் என்னை கைவிட்டாலும்
முடிந்ததென்று நாள் குரித்தாலும் - 2
நானே உன் பரிகாரி, என்றுரைத்தீரே - 2

என் சுகமும் நீரே, என் பெலமும் நீரே - 2
என் ஆரோக்கியமே, என் ஔஷதமே
- என் உயிர் இயேசுவே நீரே

3. பார்வையிழந்து போன போதும்
கால்கள் இழந்து தவித்த போதும் - 2
செவிகள் இரண்டும் அடைந்தபோதும்
வாய்கள் ஊமையானபோதும் - 2
ஆவியானவர் நடத்தினீரே - 2 

என் கண்கள் நீரே,
என் கால்கள் நீரே - 2
என் செவியும் நீரே,
என் சொல்லும் நீரே
- என் உயிர் இயேசுவே நீரே

4. ஏழையாக பிறந்தபோதும்
எளிமையாக வளர்ந்தபோதும் - 2
ஒன்றுமில்லாமல் ஒடுக்கப்பட்டும்
பொருட்டில்லாமல் மிதிக்கப்பட்டும் - 2
உம் கரம் என்னை உயர்த்தினதே - 2

என் செல்வம் நீரே,
என் சொத்தும் நீரே - 2
எதிர்காலம் நீரே,
எனக்கெல்லாம் நீரே
- என் உயிர் இயேசுவே நீரே


Song Description: En Uyir Yesuvae, என் உயிர் இயேசுவே.
Keywords: Brightson, Jenitha, En Uyir Yesuvae, Yen Uyir Yesuve.

Uploaded By: Brightson  Christopher.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.