Vazhkai Kadapom - வாழ்க்கை கடப்போம்

Vazhkai Kadapom - வாழ்க்கை கடப்போம்



வானம் நிற்க மேகம் நிற்க
நிமிடம் ஓர் சுவாசம் நிற்க
தேவன் கொஞ்சம் கை அசைத்தால்
என்ன செய்வோம்?

வாழ்க்கை சுற்றி நடப்பதெல்லாம்
தவறாய் நமக்கிருந்தால்
தேவன் சொல்லும் சொல்லை மீறி
என்ன செய்வோம் ?

பல இன்பங்கள் தந்த
நம் சொந்தம் இழந்தோம்
கோடி நினைவுகள் விட்டு சென்ற
அன்பை இழந்தோம்
ஓ அழகென்று சேர்த்து வைத்த
செல்வம் இழந்தோம்
இனி நமக்கென்று ஏதும் இல்லை
இயேசு மட்டும் தான்

இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு
வாழ்க்கை கடப்போம்

இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு
துன்பம் மறப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு
கண்ணீர் துடைப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு
நித்யம் நினைப்போம்-2

பதில் ஒன்றும் அறியாத பல கேள்விகள்
நம் மனதின் ஓரங்களை ஆட்கொள்வதேன்
தவறேதும் செய்யாத தேவன் அவர்
அவர் பிள்ளைகள் நம் வாழ்வில் நன்மை செய்வார்

வாழ்வில் ஒன்றும் அறியோம்
நம் வாழ்கை ஒவ்வொன்றையும்
முற்றும் அறிவார்
நம் சிந்தையின் கேள்விக்கு
பதிலும் இல்லை
அவர் பாதங்கள் ஒன்றே என்று
பற்றிக்கொள்வோம் வா...
 - பல இன்பங்கள்


Song Description: Tamil Christian Song Lyrics, Vazhkai Kadapom, வாழ்க்கை கடப்போம்.
KeyWords:  Christian Song Lyrics, Giftson Durai, Vazhkkai Kadappom.

Please Pray For Our Nation For More.
I Will Pray