Kartharai Dheivamaaga - கர்த்தரை தெய்வமாக

Kartharai Dheivamaaga - கர்த்தரை தெய்வமாக


 

கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
 இதுவரையில் வெட்கப்பட்டதில்ல 
அவரையே ஆதரவாய் கொண்டோர் 
நடுவழியில் நின்றுபோவதில்ல 

வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
 வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே 

ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 

வெறுமையானதை முன்னறிந்ததால் 
தேடிவந்து என் படகில் ஏறிக்கொண்டாரே 
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் 
நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே 

வாக்குத்தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூடவந்தாரே 
போகும் வழியெல்லாம் உணவானாரே 
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே


Songs Description: Tamil Christian Song Lyrics, Kartharai Dheivamaaga, கர்த்தரை தெய்வமாக.
KeyWords: John Jebaraj, Levi, Kiruba Victor, Victor Kiruba.


Please Pray For Our Nation For More.
I Will Pray