Anointing - அபிஷேகம்

Anointing - அபிஷேகம்


 


அமெரிக்க  தேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில்  ஒரு சபை போதகர் வசித்து வந்தார் . 
அவர் கர்த்தருக்காக மிகவும் வைராக்கியமாக ஊழியம் செய்து வந்தார்.

  அவர் ஒரு பிரபல  வார கிறிஸ்துவ  பத்திரிகை ஒன்றை எழுதி  வெளியிட்டு வந்தார் 

 அந்த ஊரை சேர்ந்த ஒரு மனிதர் 
அந்த போதகரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்   அதே போல  அந்த பத்திரிகை பெயரிலேயே அச்சு அசலாக அவர் எழுதும் கருத்துக்கு நேர் எதிராக எழுதி வந்து கொண்டு இருந்தாராம் . 
ஒரு நாள் இதை அறிந்த அந்த போதகரின் சபை விசுவாசியான 
ஒரு வழக்கறிஞர் ஒருவர் போதகரிடம்.. அந்த பத்திரிகையை குறித்து சொல்லினார். ஆனால்  அதற்கு முன்னதாகவே அந்த காரியத்தை அந்த போதகர் அறிந்து இருந்து இருந்தாராம்.
அந்த வழக்கறிஞர்
 "ஐயா ஒரே  ஒரு கையெழுத்து மட்டும் போட்டு கொடுங்கள் மத்த காரியங்களை நான் பார்த்து கொள்கிறேன்" என்றார். நாம் யார் என்பதை காட்டிவிட வேண்டும் என்றார்.மிகவும் கோபமாக. 
இதற்கு ஒரு வார்த்தை மறு பேச்சு பேசாமல்  
அந்த போதகர் இருந்தார். மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருந்ததால் 
அவர் கூறினார் அந்த வழக்கறிஞரிடம்
 "சகோதரரே என்னுடைய பெயர் போனால் நான் சம்பாதித்து கொள்வேன் ஆனால் என் மேல் கர்த்தர் வைத்த அபிஷேகம் போனால் நான் என்னை செய்வேன் !? "போகட்டும் பரவா இல்லை. என்றாரராம்.இதை கேட்டு விட்டு திகைத்து போய் தன்னுடைய 
 தவறை உணர்ந்து அமைதியாக சென்று விட்டாராம்.
யாராவது உங்கள் பெயருக்கு கலகம் ஏற்படுத்தி கொண்டு உள்ளார்களா !?
கவலை படாதீர்கள்.
பெயர் போனால் திரும்ப பெற்று விடலாம்.
ஆனால்  அபிஷேகம் !?????

எனவே நம்மிடம் உள்ள பெயர் 
புகழ், சொத்து, பணம் 
எதை  வேண்டுமானாலும் இழக்கலாம்.. ஆனால்  கர்த்தர் நம்மேல் வைத்த அபிஷேகத்தை  மட்டும் இழந்து விடாதீர்கள்


Sis. Meena Juliet


Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet, Anointing - அபிஷேகம்.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.
Please Pray For Our Nation For More.
I Will Pray