Alugai Ananthamanathae - அழுகை ஆனந்தமானதே
அழுகை ஆனந்தம் ஆனதே
புலம்பல் புதுப்பாடலானதே - என்
கண்ணீர் களிப்பாக ஆனதே
கர்த்தர் என்னோடு இருப்பதால்
இயேசு என்னோடு இருப்பதால் - 2
அல்லேலூயா அல்லேலூயா - 4
1. துக்கம் சந்தோஷமானதே
துயரம் என்னை விட்டு நீங்கினதே
சோர்வு என் வாழ்வில் துதியாய் மாறிட
இயேசு என்னோடுண்டு
என்னை பகைக்கும் மனிதர் நடுவிலே
என் தலையை உயர்த்தினாரே
என்னை எதிர்க்கும் ஜனங்கள் நடுவிலே
என்னை ஆசீர்வதித்தாரே
அல்லேலூயா அல்லேலூயா - 4
2. கசப்பு மதுரமானதே
கவலை என் வாழ்வில் ஒழிந்ததே
சாம்பல் சிங்காரமாக மாறிட
இயேசு என்னோடுண்டு
3. தடைகள் உடைந்து போனதே
வழிகள் மீண்டும் உண்டானதே
புதிய காரியங்கள் என் வாழ்வில் தோன்றின
இயேசு என்னோடுண்டு
Song Description: Tamil Christian Song Lyrics, Alugai Ananthamanathae, அழுகை ஆனந்தமானதே.
KeyWords: John Edward. Christian Song Lyrics, Yahweh Ministries.
Uploaded By: John Edward.