Thanimai Alla - தனிமை அல்ல



தனிமை அல்ல
இனி தனிமை அல்ல - 2
தேவன் உன்னோடு இருக்கிறார் - 2

தனிமையில் வாடி நின்ற
ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த
தெய்வம் அவர்
தனிமையில் வாடுகின்ற
உன்னை காண்கின்றார் - 2
நிச்சயமாய் உன்னை
அவர் கைவிடமாட்டார் - 2
                                    - தனிமை அல்ல

தாயின் கருவினிலே
உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்தவர்
மறப்பாரோ உன்னை - 2
தனிமையில் சிறையிலே
யோசேப்போடு இருந்தவர் - 2
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே
அமர வைத்தார் - 2
                                    - தனிமை அல்ல

பெற்றெடுத்த தாய் தந்தை
கைவிட்டுப்போனாலும்
பரம தகப்பன் உன்னை
நிச்சயமாய் ஆதரிப்பார் - 2
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர் - 2
ராஜ முடியாக கையிலே
வைத்துக்கொள்வார் - 2
                                    - தனிமை அல்ல


Song Description: Tamil Christian Song Lyrics, Thanimai Alla, தனிமை அல்ல.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Christian Song Lyrics, Thanimaiyalla Ini.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.