Why to worry? - கவலை எதற்கு?

Why to worry? - கவலை எதற்கு?





வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது சில விஷயங்களை அட ச்ச..அப்படி செஞ்சிருக்க கூடாதுன்னு தோணும்..சில விஷயங்களை இப்படி செஞ்சிருக்கலாமேண்ணு தோணும்..சில விஷயங்கள், இது நடந்திருக்க கூடாதுன்னு தோணும், சில விஷயங்கள் அது நடந்து இருக்கலாம்னு தோணும். விஷயம் என்னன்னா இவைகள் எல்லாம் நடந்து முடிந்த காரியங்கள், நாம என்ன தான் யோசிச்சு பாத்தாலும் அதை மாற்ற முடியாது. Past is past! 
ஆனால், 
செஞ்சிருக்க கூடாதுன்னு நினைத்த காரியங்களை இனிமேலாவது செய்யாம பார்த்து கொள்வதும், செஞ்சிருக்கலாமேண்ணு நினைத்த காரியங்களை இனிமேலும் செய்ய முடிந்தால் இன்னும் சிறப்பாக செய்வதும் நம் கையில் தான் உள்ளது. அப்படி நடந்திருக்க கூடாது மற்றும் இப்படி நடந்து இருக்கலாம் போன்ற காரியங்கள் பெரும்பாலும் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதால் நாம் இவைகளை குறித்து கவலை கொள்ளாமல் , ஆனால் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பாதிப்பு தொடந்து கொண்டிருந்தால் தேவ கிருபையை சார்ந்து கொள்வது ஞானம். இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நம் வாழ்க்கை தேவனிடத்திலும் , தேவன் நம் வாழ்க்கையிலும் இருந்தால் எது நடந்தாலும் நன்மைக்கே என்று போய்க்கொண்டே இருக்க வேண்டும். அதை விட்டுட்டு இப்படி கவலைப்பட்டு கொண்டிருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை பாஸ்! என்ன நான் சொல்றது புரியுதா உங்களுக்கு!


Bro. Godson GD



Description: Devotional Tamil Message By Bro. Godson GD, Why to worry?, கவலை எதற்கு?.
Keywords: Bro. Godson GD, Devotional, Tamil Devotional Message, Why worry?.
Please Pray For Our Nation For More.
I Will Pray