En Meetpar - என் மீட்பர்
என் மீட்பர்
உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே
என்னுயிர் மீட்கவே
தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர்
உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுகபத்திரமருளும்
பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்
ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
பரமபதவியினுள் என்றனை எடுப்பார்
Song Description: Tamil Christian Song Lyrics, En Meetpar, என் மீட்பர்.
KeyWords: Hema John, En Meetpar Uyirodirukkaiyile, Christian Song Lyrics., Sreejith Abraham, Freddy Joseph.
En Meetpar - என் மீட்பர்
Reviewed by
on
September 15, 2018
Rating:

No comments:
Post a Comment