Vazhvin Athaaramey - வாழ்வின் ஆதாரமே



வாழ்வின் ஆதாரமே (உபா 33:27)
தாழ்வில் என் பெலனே - 2 (ஏசா 49:5)
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே - 2

1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே (ஆதி 32:10)
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே - 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது]

2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே - 2 (சங் 18:28)

3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் - 2 (சங் 116:13)
என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே (கலா 2:20)
மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே


Song Description: Tamil Christian Song Lyrics,Vazhvin Athaaramey, வாழ்வின் ஆதாரமே.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Nandri,Valvin AtharameNandri 7, Vaalvin Aatharamae.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.