Vaarum Aiya Pothagare - வாரும் ஐயா போதகரே


1. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் – வாரும்

2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் – வாரும்

3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் – வாரும்

4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும்

5. ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்

6. பாடும் தேவதாசரின் கவி
பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
திவ்ய ஆவி தந்தருள்வாய் – வாரும்

Song Description: Tamil Christian Song Lyrics, Varum Aiya Pothagare - வாரும் ஐயா போதகரே.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Vaarum Aiya, Varum Ayya, Worship Song Lyrics, Nandri 1.

Vaarum Aiya Pothagare - வாரும் ஐயா போதகரே thumbnail Reviewed by on July 19, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.