Knee Strength (John Knox) - முழங்கால் பெலன்
முழங்கால் பெலன்
ஸ்காட்லாந்து நாட்டை சார்ந்த ஜாண் நாக்ஸ் என்ற பக்தன் முழங்காலிலே நின்று "ஸ்காட்லாந்து தேசத்தை எனக்கு தாரும் இல்லாவிட்டால் நான் மடிந்து போகட்டும்" என்று கதறினான். அப்படியே தன் முழங்கால் பலத்தால் ஸ்காட்லாந்தில் பெரிய எழுப்புதலை கொண்டு வந்தான்.
ஜாண் நாக்ஸ் என்ற பக்தன் வாழ்ந்த நாட்களில் அந்த தேசத்தை அரசாண்ட ராணி மிகவும் கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தாள். அவளை அந்த தேச ஜனங்கள் "இரத்த வெறி பிடித்த மேரி" என்று அழைத்தார்கள். ஆனால் அவளோ ஜெப வீரனாய் இருந்த ஜாண் நாக்ஸ்க்கு பயப்பட்டாள். அந்த மனிதன் முழங்காலிலே நின்றால் என் சரீரமெல்லாம் தீ பற்றி எரிவது போல் வேதனை உண்டாகுகிறது என்று சொல்லி நடுங்கினாள். தேவப் பிள்ளைகளே நீங்களும் நானும் முழங்காலிலே நின்றால் அதிகாரிகள் பயப்பட வேண்டும். மந்திரிகள் நடுங்கவேண்டும். மட்டுமல்ல சாத்தானும் அவனுடைய சேனைகளும் அதிர வேண்டும். பாதாளத்தை ஒரு நடுக்கம் பிடிக்க வேண்டும்.
ஜாண் நாக்ஸ் என்ற பக்தனைப் பார்த்து சிலர்: பெரிய ராணியை எதிற்த்து நிற்க்க, தேசத்தின் ரானுவத்தை எதிர்த்து நிற்க் எப்படி உமக்கு இந்த தைரியம் வந்தது என்று கேட்டனர்.
அதற்கு அவர் சொன்னார், எந்த ஒரு மனிதன் பரலோக ராஜாவுக்கு முன்பாக நிற்கிறானோ அவன் உலக ராணியைக் குறித்து கவலைப்படமாட்டான். பரலோக தேவ தூதர்களின் சேனை என்னோடு இருக்கும் போது பூலோக ராணுவத்திற்க்கு நான் ஏன் பயப்பட வேண்டும் என்று சொன்னார்.
இங்கிலாந்து தேசத்திலே அநாதை விடுதி நடத்தின ஜார்ஜ் முல்லர் என்பவர் ஆயிரக்கணக்கான ஜெப விண்ணப்பங்களுக்கு பதில் பெற்றவர். பத்தாயிரம் அனாதை மாணவர்களை பல ஆண்டுகள் வைத்து படிப்பித்தார். உணவளித்தார். பாதுகாத்துக் கொண்டார். அவர் வேதாகமத்தை 1000 முறை முழங்காலிலே நின்று படித்தவர். ஆகவே இவரால் கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களை செய்ய முடிந்தது.