Ellunnu Sonnaa Ennaiyaa.. - எள்ளுன்னு சொன்னா எண்ணையா..
எள்ளுன்னு சொன்னா எண்ணையா வந்து நிக்கிறான் பாருன்னு கேள்விப்பட்டு இருக்கிறோம். சூப்பர் உதாரணம் ஒண்ணு சொல்றேன் படிங்க..
இந்த சின்ன பையன் என்னடான்னா அந்த அடையாளத்தை வாங்கிட்டு வராம அந்த போரில் முக்கியமான எதிரியியான கோலியாத்தோட தலையையே வாங்கிட்டு வந்துட்டாப்ல! ஹா ஹா ஹா ஹா..ஒரே அடி..கோலியாத் காலி..அவன் ஸீன் போட்டு கிட்டு இருந்த வாளை எடுத்து அதாலே அவன் தலையை துண்டாக வெட்டிப்போட்டான்ல..
ஒண்ணு நோட் பண்ணுங்க..ஒரு வேளை தாவீது அந்த சின்ன வேலைய செய்யாம 'அட போங்கப்பா..வேற வேலை இல்ல உங்களுக்கு?..எனக்கு இன்னிக்கு நிறைய வேலை இருக்கு..song கம்போஸ் பண்ணனும்..ஆடு மேய்க்கணும்..எவ்ளோ சோலி இருக்கு, இவனுங்களுக்கு ஏன் நான் வேலை செய்யணும்' அப்படின்னு சொல்லிட்டு சாக்கு போக்கு சொல்லி இருந்திருந்தா கோலியாத்தை போட்டு தள்ளுளுற அருமையான வாய்ப்பையே மிஸ் பண்ணி இருப்பான்.. அவன் அரசனாக மிக முக்கியமான ஒரு டர்னிங் பாயிண்ட் அது தானே..கர்த்தர் நம்ம பெற்றோர் மூலமா உங்களை இப்படி நடத்த முடியும்..நமக்கு அது சின்ன வேலையா இருக்கும்..ஆனா கர்த்தர் அந்த சின்ன வேலை மூலமா உங்க தலை எழுத்தையே மாத்த முடியும்..உங்களுக்கு கொடுக்கப்பட்ட சின்ன வேலையை அற்பமா நினைக்காதீங்க..சின்ன விஷயத்துல கீழ்படிதலின் மூலமா பெரிய ஆசீர்வாதங்களை நாம் பெற முடியும்.
அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?
சகரியா 4 :10
Bro. Godson GD
Description: Devotional Tamil Message By Bro. Godson GD
Keywords: Bro. Godson GD, Devotional, Tamil Devotional Message.
Ellunnu Sonnaa Ennaiyaa.. - எள்ளுன்னு சொன்னா எண்ணையா..
Reviewed by
on
June 22, 2018
Rating:
