Ummai Paadamal - உம்மை பாடாமல்



உம்மை பாடாமல் என்னால்
இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க
என்னால் முடியாதையா - 2

அன்பு தெய்வமே நேச தெய்வமே - 2
இயேசையா என் இயேசையா
- உம்மை பாடாமல்

எளிமையானவன் சிறுமையானவன்
தண்ணீரை தேடி தாகத்தாலே
நாவறண்டு போனேனே
என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே - 2
(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே - 2
- உம்மை பாடாமல்

மனுஷர் பாக்கிறவண்ணமாய்
நீர் பார்ப்பதே இல்லை
பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை
யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை
புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே
பெலவீனன் என்று பாராமல்
அணைத்துக்கொண்டீரே - 2

உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா
உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா - 2
- உம்மை பாடாமல்

ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா
எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா
சிறுமைப்பட்டவனின்
நம்பிக்கையெல்லாம் நீர்தானையா
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே
உம்மை நம்புகிற யாவரையும்
நீர் கைவிடவேமாட்டீர் - 2

ஒரு தாயை போல தேற்றுகின்ற
தெய்வம் நீரே
தகப்பனை போல சுமக்கின்ற
தெய்வம் நீரே - 2
- உம்மை பாடாமல்


Song Description: Tamil Christian Song Lyrics, Ummai Paadamal, உம்மை பாடாமல்.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Ummai Padamal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.