Ummai Nambum Nan - உம்மை நம்பும் நான்



உம்மை நம்பும் நான் பாக்கியவான்
உம்மையே நம்பியிருப்பேன்
உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
உம் அன்பையே நம்பியிருப்பேன்

உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
உம்மையே நம்பியிருப்பேன் 
உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
உம் அன்பையே நம்பியிருப்பேன்
                           - உம்மை நம்பும்

நீர்தானே என் துணையானீர்
என் கேடகமும் ஆனீர் - 2
என்னை நினைப்பவரே
(என்னை) ஆசீர்வதிப்பவரே - 2

உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
முடிவு பரியந்தம் உம்மை நம்புவேன் - 2
                           - உம்மை நம்பும்

உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
உம் நன்மை மிகுந்திருக்கும் - 2
குற்றப்பட்டுப் போவதில்லை
நான் வெட்கப்பட்டுப் போவதில்லை - 2
                           - உம்மை நம்பும்

சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
அசையாமல் நிலைத்திருப்பேன் - 2
ஆகாமியத்தின் கொடுங்கோல்
என்மேல் நிலைப்பதில்லை - 2
                           - உம்மை நம்பும்


Songs Description: Tamil Christian Song Lyrics, Ummai Nambum Nan, உம்மை நம்பும் நான்.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae Vol - 2, Dr. Joseph Aldrin, Worship Songs, Ummai Nambum Naan.