Bayappadathe Anjaathe - பயப்படாதே அஞ்சாதே



பயப்படாதே அஞ்சாதே
உன்னுடன் இருக்கிறேன்
திகையாதே கலங்காதே
நானே உன் தேவன் - 2

1.சகாயம் செய்திடுவேன்
பெலன் தந்திடுவேன் - 2
நீதியின் வலக்கரத்தால்
தாங்கியே நடத்திடுவேன் - 2

நீயோ என் தாசன்
நான் உன்னை தெரிந்து கொண்டேன் - 2
வெறுத்து விடவில்லை
உன்னை வெறுத்து விடவில்லை
                                         - பயப்படாதே

2.(உன்) வலக்கரம் பிடித்துக்கொண்டேன்
வழுவாமல் காத்துக்கொள்வேன் - 2
(உன்னை) அழைத்தவர் நான் தானே
நடத்துவேன் இறுதி வரை - 2
                                      - நீயோ என்

3.உன்னை எதிர்ப்பவர்கள்
எரிச்சலாய் இருப்பவர்கள் - 2
உன் சார்பில் வருவார்கள்
உறவாடி மகிழ்வார்கள் - 2
                                      - நீயோ என்


Song Description: Tamil Christian Song Lyrics, Bayappadathe Anjaathe, பயப்படாதே அஞ்சாதே.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal - 39, jebathotta jeyageethangal songs lyrics, Payappadaathae, Bayappadaathae.



All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.