Neerintri Vaazhvethu - நீரின்றி வாழ்வேது
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா - 2
உலகத்தில் நூற்றாண்டு
நான் வாழ்ந்த போதும் - 2
உம் இல்லத்தில் வாழும்
ஒரு நாளே போதும் - நீரின்றி
1. பலகோடி வார்த்தைகள் நான்
கேட்டபோதும்
இயேசுவே நீர் பேசும்
ஒரு வார்த்தை போதும் - 2
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே - 2
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே!
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும்
அசையாதையா
உம் துணையின்றி உயிர்வாழ
முடியாதைய்யா!
3. எத்தனை நன்மைகள்
செய்தீரையா - அதில்
எதற்கென்று நன்றி சொல்லி
துதிப்பேனய்யா
அத்தனையும் சொல்ல
வேண்டுமென்றால்
ஆயிரம் நாவுகள் போதாதையா!
Song Description: Tamil Christian Song Lyrics, Neerintri Vaazhvethu, நீரின்றி வாழ்வேது.
Keywords: Unakkoruvar Irukkiraar, S. Gnanasekar, Worship Song Lyrics, Christian Song Lyrics, Neerintri Vaalvethu.